சுவிட்சர்லாந்து ஹோட்டல் அறிவிப்பால் இந்தியர்கள் க்ஷாக்; இப்படி ஒரு அவமானமா?
சுவிட்சர்லாந்து செல்லும் இந்திய பயணிகளுக்கு ஹோட்டல் நிர்வாகங்கள் வைத்த அறிவிப்பு பலகை அதிர்ச்சியையும், அவமானத்தையும் இந்தியர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
சமீபமாக இந்தியர்கள் பலரும் சுவிட்சர்லாந்துக்கு அதிகம் பயணிக்கும் நிலையில் சுற்றுலா பயணிகளை கவர பல ஸ்விஸ் உணவகங்கள் பஃபே முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.
அன்புள்ள இந்திய சுற்றுலாப் பயணிகளே...எடுக்காதீர்கள்
இதில் ஒருவர் குறிப்பிட்ட அளவு தொகை செலுத்திவிட்டு அங்குள்ள உணவு வகைகளில் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் உணவை பார்சல் செய்து தர மாட்டார்கள் அவ்வாறாக பணம் கட்டி பஃபே சாப்பிடும் இந்தியர்கள் பலர் உணவுகளை தங்கள் பைகளுக்குள் போட்டு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது.
இதனால் சுவிஸ் உணவகங்கள் வெளியிட்ட அறிவிப்பு குறித்து ஒரு இந்தியர் மன வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்,
“சில வருடங்களுக்கு முன்பு, நான் என் குடும்பத்துடன் சுவிட்சர்லாந்தில் இருந்தேன். ஹோட்டல் அறையின் கதவின் பின்னால், "உங்கள் பணப்பையில் பஃபே பொருட்களை பேக் செய்யாதீர்கள். நீங்கள் விரும்பினால், நாங்கள் உங்களுக்கு தனித்தனியாக பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வழங்கலாம்" என்று சுருக்கமாகக் கூறக்கூடிய ஒரு நீண்ட செய்தி இருந்தது.
இது ஒரு பரவாயில்லை என்று தோன்றுகிறது, ஆம், அது 'வரம்பற்றது', ஆனால் உண்மையில் 'வரம்பற்றது' அல்ல, நீங்கள் அதையெல்லாம் உங்கள் பையில் சேமித்து வைத்து, வாழ்நாள் முழுவதும் இலவச உணவைப் பெறுங்கள்.
என்னை மிகவும் காயப்படுத்திய ஒரு உண்மையான விஷயம் என்னவென்றால், அந்தச் செய்தி யாரையும் மற்றும் அனைவரையும் நோக்கிச் சொல்லப்பட்டிருக்கலாம், ஆனால் அது, குறிப்பாக, அன்புள்ள இந்திய சுற்றுலாப் பயணிகளே..." என்று தொடங்கியது என அவர் கவலையுடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள ஆர்பிஜி நிறுவனர் ஹர்ஷ் கோயங்கா “இந்த அறிவிப்பைப் படித்ததும் எனக்கு கோபம், அவமானம், எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
ஆனால் சுற்றுலாப் பயணிகளாகிய நாம் சத்தமாக, முரட்டுத்தனமாக, கலாச்சார ரீதியாக உணர்திறன் இல்லாதவர்கள் என்பதை உணர்ந்தேன்.
இந்தியா ஒரு சர்வதேச சக்தியாக மாறி வருவதால், நமது சுற்றுலாப் பயணிகள் நமது சிறந்த உலகளாவிய தூதர்கள். நமது பிம்பத்தை மாற்றுவதில் பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.