திருமணமாகி நான்கு மாதம்; கட்டிலின் கீழ் பெண்ணின் சடலம்; நடந்தது என்ன?
இந்தியாவில் மனைவியை கொன்று சடலத்தை கட்டிலுக்கு அடியில் கணவன் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா பெல்காம் மாவட்டம் முதலகி தாலுகாவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
4 மாதங்களுக்கு முன்பு சாக்ஷி (20), ஆகாஷ் தம்பதிக்கு திருமணம் நடந்தது. கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியை ஆகாஷ் கொடுமைப்படுத்தியுள்ளார்.
தாய் வருவதை அறிந்து தலைமறைவு
ஆகாஷின் பெற்றோர் மும்பைக்கு சென்றதால், வீட்டில் தம்பதி மட்டுமே இருந்தனர். நான்கு நாட்களுக்கு முன், மனைவியுடன் ஆகாஷ் தகராறு செய்தார். அப்போது கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்தார்.
உடலை பெட்ஷீட்டில் சுற்றி, கட்டிலுக்கு கீழே தள்ளினார். எதுவுமே நடக்காதது போன்று இருந்தார். இதற்கிடையே மும்பையில் இருந்து, ஆகாஷின் தாய் நேற்று காலை ஊருக்கு திரும்பினார்.
தாய் வருவதை அறிந்த ஆகாஷ், வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். மாமியார் வீட்டிற்கு வந்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய கணவனையும் தேடிவருகின்றனர்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.