கத்தி முனையில் காரை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் ; முன்னாள் இராணுவ வீரருக்கு நேர்ந்த விபரீதம்
களுத்துறை - வாதுவை பிரதேசத்தில் சாரதி ஒருவரை கத்தி முனையில் மிரட்டி காரை கொள்ளையிட்டுச் சென்றதாக கூறப்படும் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை - பின்வத்தை பிரதேசத்தில் வசிக்கும் 19 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இது தொடர்பில் தெரியவருவதாவது, மூன்று இளைஞர்கள் கார் ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சாரதியை கத்தி முனையில் மிரட்டி காரை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்த கார் சாரதி ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் ஆவார்.
பின்னர் கார் சாரதி இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸாரால் பாணந்துறை - பின்வத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைக்க சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.