யாழில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் சிக்கினர் ; பிடிபட்ட பொருட்கள்
வலி.வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிசார் தெரிவித்தனர்.
காங்கேசன்துறை, தெல்லிப்பளை ஆகிய இடங்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் நேற்றுக் கைது செய்யபட்டனர்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 15 மின் நீர்ப்பம்பிகள்,வாகனங்கள் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மோட்டர்,புள்ளுவெட்டி இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்காவற்துறையினர் கூறினர்.
விசாரணைகளின் போது சந்தேக நபர்களினால் கடந்த ஒன்றரை வருடங்களாக திருடப்பட்டு வந்த பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் கைதான சந்தேக நபர்கள் இருவரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.