தேடப்பட்டு வந்த முக்கிய துப்பாக்கிதாரி கைது
மொரட்டுவ பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று (31) தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிங்குரான பகுதியில் நடத்திய சோதனையில் 13 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யயப்பட்டவர் கடந்த ஜூலை 11ஆம் திகதி ஹிரண பகுதியில் துப்பாக்கிச் சூட்டினால் ஒருவரை காயப்படுத்தியதோடு, பாணந்துறை பொலிஸ் பிரிவில் மற்றுமொருவரை சுட்டுக் கொலை செய்ய திட்டமிட்டதற்காகவும் தேடப்பட்டு வந்துள்ளார்.

கைது செய்யப்பட்டபோது சந்தேக நபரிடம் 13 கிராம் ஹெரோயினும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் ஹிங்குரான பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.