இலங்கையில் நடந்த மோசடி ; வீடொன்றை உடைத்து தங்க நகைகளை திருடிய சந்தேகநபர் கைது
கண்டி - வெரெல்லகம பகுதியில் வீடொன்றை உடைத்து பணம் மற்றும் தங்க நகைகளை திருடிய சந்தேகநபர் ஒருவரை சம்பவம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குள் கண்டி பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த கைது நடவடிக்கையானது நேற்று செவ்வாய்க்கிழமை (10) அலதெனிய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தங்க நகைகள் அடங்கிய கைப்பையுடன் தப்பிச் சென்ற பின்னர், பொலிஸாரின் வழிகாட்டுதலின் பேரில் குறித்த பொலிஸ் மோப்ப நாய் வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டி உள்ளது.
வீட்டுக்குள் பிரவேசித்த பொலிஸ் குழுவினர், அறையில் பதுங்கியிருந்த சந்தேக நபரை கைதுசெய்ததுடன், அவரிடம் நடத்திய விசாரணையில், அவரிடம் இருந்து திருடப்பட்ட பணத்தில் இருந்து 5000 ரூபாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வீட்டின் அறையொன்றின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த சந்தேகநபர் 25000 ரூபா பணத்துடன் இரண்டு மோதிரங்கள் மற்றும் ஒரு ஜோடி காதணிகளை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என கூறப்படும் சந்தேகநபர் பணம் பெறுவதற்காக குறித்த தங்க நகைகளை அடகு வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் அலதெனிய பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.