கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு; வவுனியாவில் சுற்றிவளைக்கப்பட்ட வர்த்தக நிலையம்
நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், வவுனியா கோவில்குளம் பகுதியில் வர்த்தக நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நடத்தப்பட்ட சோதனையில், அரிசி மற்றும் கோதுமை மாவை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிலையமொன்றே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டது.
நாட்டில் , அத்தியாவசிய பொருட்களை பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க அவசரகால விதிமுறைகளை பிரகடப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ந்தும் சோதனைகளை முன்னெடுத்துவருகிறது.
அதன்படி இதுவரையில் மேற்கொண்ட சோதனையில் 32,597 மெட்ரிக் டன் சீனி மற்றும் 643.5 மெட்ரிக் டன் நெல் மீட்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.