சுரேஷ் சலே உடல் நிலை தொடர்பில் கண்ணீர் விடும் மனைவி
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயை அவரது மனைவி மனோரி இன்று பார்வையிட்டுள்ளார்.
அதன் பின்னர், அவரது மனைவி மனோரி சலே ஊடகங்களுக்கு விசேட கருத்துத் தெரிவித்தார். அவருக்கு ஏற்பட்ட இரத்தக் கட்டிகள் (Blood clots) காரணமாக கை மீண்டும் பலத்த வீக்கமடைந்துள்ளது.

எனினும், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அவருக்குத் தேவையான ஊசிகளைச் செலுத்தி, தீவிரமாகக் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்களின் இந்தத் தீவிர சிகிச்சை காரணமாக அவர் தற்போது வெற்றிகரமாக குணமடைந்துள்ளார்.
முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே, சி.ஐ.டி (CID) காவலில் இருந்தபோது மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.