இலங்கைக்கு 104 பஸ்களை வழங்கிய சீனாவின் 'FOTON'
இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், 104 'FOTON மெட்ரோ பஸ்கள்' சீனாவால் வழங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் கையளிக்கப்படும் விசேட நிகழ்வு சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள FOTON நிறுவனத்தில் நடைபெற்றது.
இதில் 'லங்கா மெட்ரோ டிரான்சிட்' நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனத்தினர் தெரிவிக்கையில்,

நாடு முழுவதும் நவீன, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவதில் இந்த பஸ்கள் பங்களிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
துரத்தும் தமிழரின் பாவ கணக்குகள்; நடப்பதற்கு கூட திராணி அற்ற மஹிந்த; கைதுக்கு அஞ்சி ஓடி ஒழியும் கோட்டாபய !
இந்த பஸ்களின் வருகையானது, இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியில் மற்றுமொரு முக்கிய மைல்கல் என விவரித்துள்ள நிறுவனம், பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்காக அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
