சூப்பர் சிங்கர் பிரபலம் அஜய் கிருஷ்ணாவின் மனைவி பகிர்ந்த அழகிய புகைப்படங்கள்!
தமிழகத்தில் பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர்.
இந்த நிகழ்ச்சியின் 9 சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகின்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவ்வாறான நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 7 சீசன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பாடகர் அஜய் கிருஷ்ணா.
உதித் நாராயணன் போலவே குரல் வளம் கொண்ட இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
கண்ணான கண்ணே என்ற பாடலை பாடி instagram பக்கத்தில் பதிவிட்ட போது ஒரு ரசிகையாக இந்த பாடலை பாராட்டி ஜெஸ்ஸி என்பவர் பதிவு போட்டார்.
அதற்கு அஜய் கிருஷ்ணா நன்றி தெரிவித்த நிலையில் அப்படியே இருவரும் பேசி பழகி காதலிக்க தொடங்கினர்.
பின்னர் நாளடைவில் திரு வீட்டார் சம்பந்தத்துடன் இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென இருவரும் வெளியேறிய நிலையில் சூழ்நிலை காரணமாக வெளியேறுவதாக தெரிவித்தனர்.
அதன் பிறகு ஜெஸ்ஸி கர்ப்பமாக இருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்தனர்.
இந்நிலையில் இவர்களுக்கு அண்மையில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது அஜய் கிருஷ்ணாவின் மனைவி ஜெஸ்ஸி பிரசவ வழியில் துடித்தது முதல் கையில் குழந்தையை பெற்ற தருணம் வரை புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.