தமிழக முதல்வர் விஜய்யின் ஜோசியருக்கு உயர் அரசுப்பதவி ; அதிரடிகளுக்கு மத்தியில் வெடித்த சர்ச்சை
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து அக்கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
எனவே கவனிக்கத்தக்க ஒரு முதல்வராக விஜய் மாறியிருக்கிறார். முதல்வராக பதவியேற்ற பின்னர் அவரின் நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

அதிரடி உத்தரவு
நேற்று கூட முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான் ஆகிய பலரையும் நேரில் சந்தித்தார். அதேபோல் இன்று காலை 717 டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடவும் உத்தரவிட்டார்.
ஒருபக்கம் பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படியெல்லாம் பாராட்டை பெற்று வரும் விஜய் திடீரென ஒரு விஷயத்தில் சறுக்கியிருக்கிறார்.
முதலமைச்சர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் மற்றும் தவெக செய்தி தொடர்பாளரான ரிக்கி ரத்தன் பண்டிட்டுக்கு தமிழக அரசின் புதிய உயர் பதவி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
முதலமைச்சர் விஜயின் அரசியல் உதவியாளராக, சிறப்பு பணி அதிகாரி (Officer on Special Duty) அந்தஸ்தில் அவருக்கு பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கான பணி வரையறுகள் தனியாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இந்த ரிக்கி ரத்தன் பண்டிட் ஆலோசனையில்தான் விஜய் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பு திருச்செந்தூர், சாய்பாபா போன்ற கோவிலுக்கு சென்று வழிபட்டது குறிப்பிடத்தக்கது.
ஜோதிடருக்கு அரசு பணி ஒதுக்கப்பட்டிருப்பது எதிர்ப்பை பெற்று வருகிறது.