விண்வெளியில் அதிக நேரம் 'SpaceWalk'சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்
கடந்த ஆண்டு ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர்.
ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நேரம் 'SpaceWalk' செய்த பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் பெற்றுள்ளார்.
மிகுந்த பாதுகாப்புடன் 5 மணி நேரம் 26 நிமிடங்கள் 'Space Walk' செய்தனர். 9வது முறையாக Space Walk செய்துள்ள சுனிதா வில்லியம்ஸ், இதுவரை விண்வெளியில் மட்டும் 62 மணி நேரம் 6 நிமிடங்கள் Space Walk செய்துள்ளார்.
இது வில்லியம்ஸுக்கு ஒன்பதாவது விண்வெளி நடை மற்றும் புட்ச் வில்மோரின் 5 ஆவது ஐந்தாவது விண்வெளி நடையாகும். சுனிதா வில்லியம்ஸ்க்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஸ்பேஸ் எக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.