ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் அழைக்கப்படுகிறேன் ; உதய கம்மன்பில
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை வெளிப்படுத்துவதால் திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளேன். வாக்குமூலமளிக்க ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் அழைக்கப்படுகிறேன்.
அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியப்போவதில்லை என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல்
பொலிஸ் தலைமையகத்தில் திங்கட்கிழமை (11) விசாரணைகளுக்காக முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று நாட்களின் பின்னர் அரசாங்கம் மிகவும் பலவீனமான முறையில் செயற்படும் என்று நான் குறிப்பிட்டேன்.
ஆரம்பத்தில் நான் மட்டும் தான் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டினேன்.ஆனால் இன்று முழு நாடும் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறது.
அன்று அறிஞர் அண்ணா இன்று இவர்... வைகோவின் வீட்டில் விஜய்யின் காலில் விழுந்த பெண் ; பூரிப்பில் செய்த செயல்
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை வெளிப்படுத்துவதால் திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளேன். வாக்குமூலமளிக்க ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் அழைக்கப்படுகிறேன்.
ஊழல் மோசடிகள் பற்றி பொலிஸாருக்கும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கும் நாங்கள் தகவல் வழங்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது. அரசாங்கத்தின் அனுசரணையுடன் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பு ஊடாக எமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியப்போவதில்லை.
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்துவேன். மக்கள் எம்பக்கம் உள்ளார்கள் என்று குறிப்பிடும் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்.
தேர்தலை நடத்தினால் மக்கள் யார் பக்கம் உள்ளார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு கடும் அழுத்தம் பிரயோகிப்போம் என்றார்.