அன்று அறிஞர் அண்ணா இன்று இவர்... வைகோவின் வீட்டில் விஜய்யின் காலில் விழுந்த பெண் ; பூரிப்பில் செய்த செயல்
தமிழக அரசியலில் நிலவி வந்த நீண்ட கால அரசியல் பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முதலமைச்சர் விஜய் அவர்கள் மேற்கொண்ட சந்திப்புகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
"அன்று அறிஞர் அண்ணா அவர்கள் மற்ற கட்சி தலைவர்களுக்கு எத்தகைய மரியாதையை கொடுத்தாரோ, அதை இன்று தம்பி விஜய் செய்திருக்கிறார்" என்று வைகோ பாராட்டியுள்ளார்.

பதவியேற்பு நிகழ்ச்சி
நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றபிறகு பல விஷயங்களை செய்து வருகிறார். இன்று சட்டப்பேரவையில் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்தபிறகு நேராக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்றார்.
அதனை தொடர்ந்து வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான் உள்ளிட்டோர் வீட்டுக்கும் சென்று இருந்தார் விஜய்.
வைகோ வீட்டுக்கு முதல்வர் விஜய் சென்றபோது, அவரது வீட்டில் பணியாற்றும் பெண்களை வரச்சொல்லி விஜய்யிடம் பேசவைத்திருக்கின்றனர்.
இவங்க எல்லாம் விசிலுக்கு ஓட்டு போட்டவங்க என அந்த பெண்களை பற்றி கூறினர். அவர்கள் விஜய்யை அருகில் பார்த்த பூரிப்பில் இருந்தனர். ஒரு பெண் திருஷ்டி கழிக்க, விஜய்யும் அதை திருப்பி செய்தார். அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
இந்நிலையில் 1967 தேர்தலில் அண்ணா தலைமையிலான தி.மு.க. வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணா முதல்வராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் காமராஜர் தோற்கடிக்கப்பட்டார். அண்ணா முதல்வராக பதவி ஏற்றதும், காமராஜர் உள்ளிட்ட மூத்த தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அதன்பிறகு, முதலமைச்சராக பதவி ஏற்றவர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்தது கிடையாது.
தற்போது சுமார் 59 வருடத்திற்குப் பிறகு முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள விஜய் மூத்த தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
Love how the lady Drishti Sutharadus for CM Vijay and he does it right back!! pic.twitter.com/GdFVHS5PvO
— Akshita Nandagopal (@Akshita_N) May 11, 2026