சர்வக்கட்சி அரசாங்கத்தின் முக்கிய பதவிக்கு சுமந்திரன்!
ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்கு சஜித் , டளஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சிலரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், சர்வக்கட்சி அரசாங்கத்தின் முக்கிய பதவி ஒன்றுக்கு கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இது விடயம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அதேவேளை , சர்வக்கட்சி அரசாங்கம் குறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக சபாநாயகர் தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு, மீண்டும் கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
அரசியல் கட்சிகளும் கொழும்பில் இன்று மந்திராலோசனை நடத்தவுள்ளன.
இதற்கிடையில் சர்வக்கட்சி அரசின் அமைச்சரவை தொடர்பான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றன. இதில் ஜனாதிபதி பதவி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவுள்ளதெனவும், பிரதமராக எம்.ஏ. சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் 20 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த பட்டியலில் சாணக்கியனும் இடம்பிடித்துள்ள்லதாகவும் கூறப்படுகின்றது.