இலங்கை தமிழரசு கட்சியின் அடையாளத்தை அசிங்கப்படுத்திய எம்.ஏ சுமந்திரன்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவி உட்பட அனைத்து பொறுப்புக்களில் இருந்து விலகுவதாக மாவை சேனாதிராஜா கட்சியினருக்கு அறிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், கடந்த 50 ஆண்டுகளாக இலங்கை தமிழர் அரசியலில், தமிழரசு கட்சியின் ஒரு சிறப்பான அடையாளமாக இருந்து வந்த மாவை சேனாதிராசாவை அவமானப்படுத்தி, முக்கியமான தேர்தல் நேரத்தில் தனது தமிழரசு கட்சி தலைவர் பதவியைகூட இராஜனாமா செய்துவிட்டு செல்லும் நிலையை திட்டமிட்டு உருவாக்கிய எம்.ஏ சுமந்திரனின் செயற்பாடு மிக மிக கேவலமானது என முகநூலில் செலஸ்டின் ஸ்டானிஸ்லாஸ் என்பவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்ட பதிவில்,
கட்சி அரசியலுக்கு அப்பால், மாவை சேனாதிராசா தமிழரிற்கு ஒரு அரசியல் தாத்தா போன்றவர், அவர்கள் பிழை விடுவார்கள், மறப்பார்கள் அதற்காக அவர்களை இந்தளவு தூரம் மனம்நோக வைத்து அரசியல் செய்த சுமந்திரனின் செயற்பாடு அருவருப்பானது.
மாவை சேனாதிராசா ஐயா ஒரு அரசியல் புதையல், தோண்டத் தோண்ட பற்பல விடயங்கள் வந்துகொண்டே இருக்கும், அவர் தனது ஓய்வு காலத்தில் தனது அரசியல் சுயசரிதையை எழுத வேண்டும் என்று அவரை விநயமாக கேட்டுக்கொள்கிறேன்.
மாவை சேனாதிராசா ஐயா அனைவராலும் மதிக்கப்பட வேண்டிய ஒரு அரசியல் பொக்கிசம் என்பதை அழுத்தம் திருத்தமாக இங்கு பதிவு செய்கிறேன்.
எதிரியையும் மதிப்பதும் தமிழர் பண்பாடே… சேனாதிராசாவை அசிங்கப்படுத்திய சுமந்திரனையும் அவரின் அடிவருடிகளையும் தமிழர் இந்த தேர்தலில் செல்லாக்காசாக்கி தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று நான் பதிவு செய்கிறேன் என அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.