சுமந்திரன் சாணக்கியனை வெளியேற்றுங்கள் சுவாமி சங்கரானந்தா போர்க்கொடி!
சுமந்திரன் சாணக்கியனை வெளியேற்றுங்கள் 1950 களில் இருந்து ஈழத் தமிழர்களின் உரிமைக்காக 20 வருடங்களாக நடைபெற்ற அகிம்சை போரின் தோல்வி ஆயுதப் போரட்டத்தை முப்பது வருடங்களாக கொண்டு நகர்த்தினாலும் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற துயரகரமான அந்த தோல்வி மீண்டும் எமது உரிமைகளை அகிம்சை வழியில் கேட்டுப் பெறவேண்டிய சூழலை ஏற்படுத்தி இருக்கின்றது.
அதன் பின்னர் கடந்த பன்னிரெண்டு வருடங்களாக தமிழ் மக்களின் முதன்மை தெரிவான தமிழீழ விடுதலைப்புலிகளின் அணுசரனையோடு வரவேற்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனும் ஊடகப் பேச்சாளரான M.A.சுமந்திரனும் தமிழர்களின் உரிமைகளை என்றும் பெறமுடியாதவாறு சிங்கள ஆட்சியாளர்களின் அட்டவணையில் செயல்பட்டார்கள்,
இனப்படுக்கொலை அல்ல போர் குற்றம் அல்ல என ஆரம்பித்து அரசியல் தீர்வைவிட அபிவிருத்தி மேல் எனப் பேசி தம் எஜமானர்களான சிங்கள ஆட்சியாளர்களுக்கு நல்ல பிள்ளைகளாய் தமிழில் தேசிய கீதம் கேட்டு மெய் மறந்தோம் என்று ஆனந்தக் கண்ணீர் விடுத்து சிங்களவர்களுடன் வாழ்வதில் பெருமையாய் எண்ணுகின்றேன் என பேட்டி அளித்து இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியற்றவர்கள் என நாசுக்காக தமிழர்களை நம்பவைத்து நல்லிணக்க அரசு என்று கட்டுக்கதைகட்டி அந்த நல்லிணக்க அரசிடம் மென்மையாகவும் தன்மையாகவும் கொஞ்சிப் பேசித்தான் அவர்கள் தரும் உரிமையை பெறமுடியும் என்று சொன்னவர்கள் கோத்த அரசுடன் கோதாவில் இறங்கும் அளவிற்கு சிங்கங்கள் ஆகினார்கள் அவர்களுடன் இப்போது R.R.சாணக்கியனும் இணைந்து இருக்கின்றார்.
இப்போது ஆரம்பத்தில் ரணிலை எதிர்த்த இந்த எலிகள் பெட்டியையும் புட்டியையும் பெற்றுக் கொண்டு அமைச்சுபதவி எடுத்துக் கொண்டு வாழ விஞ்ஞான விளக்கங்களை அள்ளி வீசுகின்றார்கள் என்பதை உணர்ந்து இந்த ஏமாற்றுக்காரர்களை விரட்டி அடிக்கும் பணியை தமிழ் மக்கள் செய்யாவிட்டால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் எந்த உரிமையும் கிடைக்கப் போவதில்லை என்பதோடு அங்கு தமிழர்களின் தனி இருப்பும் கேள்விக்குறி ஆகும் என்பதை உணர்ந்து வடகிழக்கு மக்களின் முதன்மை பிர்திநிதிகள் என்ற எண்ணம் கொண்ட தமிழரசு கட்சியின் கூட்டத்தை மாவை சேனாதிராஜா தலைமையில் கூட்டி இளைஞர் அணி மகளிர் அணி மற்றும் அதன் ஆயுள் கால உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆகக் குறைந்தது சுமந்திரன் மற்றும் சாணக்கியனின் உறுப்புரிமையை பறித்தெடுக்க பரிந்துரைக்கின்றேன் இதுவே ஈழ வரலாற்றில் பாரம்பரியம் மிக்க தமிழரசு கட்சி இலங்கை தமிழர்களுக்கு செய்யும் குறைந்த பட்சமான நன்மையாகும்.
இனிவரும் காலங்களில் சிங்களத்துடன் சேர்ந்து அரசியல் நாடகம் ஆடாமல் தமிழர் பிரச்சனையை உறுதியுடன் பேசக்கூடியவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கி சந்தர்ப்பம் அளித்தால் உலக ஒழுங்கில் சிங்களம் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான அடிப்படை உரிமையையாவது தரும் என்பதோடு இந்த இருவரின் வெளியேற்றம் ஆளும் கட்சிக்கு இந்த சிங்களக் கூலிகளால் தற்காலிகப் பலம் சேர்த்தாலும் இந்த நடவடிக்கையினால் அடுத்து வரும் தேர்தல்களில் தமிழ் தமிழரசு கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதிக ஆசனங்களை பெறும் என்பதே நிதர்சனமாகும்.