அமைச்சர் டக்ளஸ் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்ட சுமந்திரன்!

Kilinochchi Douglas Devananda M.A.Sumanthiran Sea cucumber Profit
By Shankar Dec 18, 2021 12:25 AM GMT
Shankar

Shankar

Report

 நாட்டில் 2025 ஆம் ஆண்டளவில் கடலட்டை ஏற்றுமதி ஊடாக சுமார் 30 பில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

இன்று (17-12-2021) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை எனப்படும் நக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் திரு நிருபராஜ், கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பதவியேற்ற பின்னர் கிளிநொச்சியில் 270 கடலட்டைப் பண்ணைகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் 616 இற்கும் மேற்பட்ட பண்ணைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்ட சுமந்திரன்! | Sumanthiran Accepts Minister Douglas Opinion

இதனை அடுத்து, கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (.M.A Sumanthiran) ஏற்றுக் கொண்டார்.

மேலும், கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் செயற்பாடுகளின் போது, பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் நடமுறைச் சிக்கல்களினால், கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதில் தாமதங்கள் ஏற்படுவதாக நக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் நிருபராஜ் தெரிவித்திருந்தார்.

இதன்போது, சம்மந்தப்பட்ட சட்ட பிரதியை காண்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, (Douglas Devananda) அதில் சொல்லப்பட்டிருந்த சட்ட ஏற்பாடுகளை தெளிவுபடுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து சட்டப் பிரதியை முழுமையாக வாசித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிரதேச சபைகளின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என்பதை ஏற்றுக்கொண்டார்.

அமைச்சர் டக்ளஸ் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்ட சுமந்திரன்! | Sumanthiran Accepts Minister Douglas Opinion

இதேவேளை, காணிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றபோது கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இன்றைய கலந்துரையாலில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பூநகரிப் பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான 196 ஏக்கர் காணிகளை விவசாயப் பண்ணை அமைப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்றினால் விண்ணப்பித்தமை தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த விடயம் இன்றைய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட நிலையில், மேற்குறித்த விடயத்தினை தெரிவித்த இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பால் தேவையைக் கவனத்தில் கொண்டு மாடு வளர்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்குமாறும் அதேபோன்று ஆடு வளர்ப்பிலும் தேவையான அக்கறை செலுத்துமாறும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கினார்.

இதைப்போன்று கிளிநொச்சியில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் ஆராயப்பட்டதுடன் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த நிலையில், பிரதேச சபைகளில் காணப்படுகின்ற சுகாதாரப் பணியாளர்களுக்கான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் விசேட தீர்மானத்தினை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் (Douglas Devananda) கோரிக்கை முன்வைத்துள்ள கரைச்சி பிதேச சபை தவிசாளரான வேழமாலிகிதன், இராணுவப் பயன்பாட்டில் இருக்கின்ற கரைச்சி பிரதேச சபை நூலகத்திற்கான பகுதிக் கட்டிடத்தினையும் விடுவித்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, Worthing, United Kingdom

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
18ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, அளவெட்டி, மல்லாகம், Newbury Park, United Kingdom, Wickford, United Kingdom

28 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bangkok, Thailand, Canberra, Australia

16 Nov, 2025
நன்றி நவிலல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Vancouver, Canada, Scarborough, Canada

15 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வெள்ளவத்தை

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோப்பாய், Ontario, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US