சுமந்திரன் - பஷில் ராஜபக்ஷவுக்கு இடையே கடும் வாக்குவாதம்
கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கும், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கூட்டதில் , நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான வழக்கு தொடுக்கப்படாமல் அவரை தொடர்ந்தும் தடுப்பில் வைத்திருப்பது பற்றி எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்த சந்தர்ப்பத்தில் அரச தரப்பிடம் வினவினார்.
இதன்போது எதிர்கட்சிப் பக்கமாக எம்.ஏ சுமந்திரன் கருத்து வெளியிட்ட சந்தர்ப்பத்தில் குறுக்கீடு செய்துள்ள நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ, பதில் கூறியதால் இருவருக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை நிதியமைச்சராக பஸில் ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் இன்றே அவர் முதல் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.