சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். ராசிகளின் அதிபதியான சுக்கிரன், 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.

சுக்கிரனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான முழு பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

மிதுனம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுவும் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். தடைபட்ட திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், இக்காலம் உகந்ததாக இருக்கும்.

துலாம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். கடனால் சிரமப்பட்டு வந்தால், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். கலை, ஊடகம், ஃபேஷன் துறையில் இருப்பவர்கள் பெரிய அளவில் பெற்றியைக் காண்பார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய திட்டங்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.

கும்பம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒவ்வொரு செயலிலும் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறக்கூடும். தொழில் ரீதியான பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவு நனவாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கவாம். பணியிடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
