சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதில் ஒரு டீயை ட்ரை பண்ணி பாருங்க
கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இப்படி திடீரென்று காலநிலையில் மாற்றம் ஏற்படும் போது குறிப்பாக காலநிலை குளிர்ச்சியாகும் போது நிறைய பேர் சளி, இருமல், தும்மல், மூக்கு ஒழுகல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.
அதுவும் மழை பெய்யும் போது உடலை இதமாக வைத்துக் கொள்ள பலருக்கு அடிக்கடி டீ குடிக்க வேண்டுமென்று தோன்றும்.
மழை பெய்யும் காலத்தில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமானால் ஒருசில டீக்களை தயாரித்துக் குடித்து வாருங்கள்.
இஞ்சி டீ
இஞ்சி டீ யை பெரும்பாலானோர் விரும்பி குடிப்பார்கள். குறிப்பாக மழைக்காலத்தில் நிறைய பேர் இஞ்சி டீயை குடிப்பது மிகவும் நல்லது.
இந்த டீ செரிமானத்திற்கு உதவுவதோடு நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
அதற்கு ஒரு டம்ளர் நீரில் சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
சீமைச்சாமந்தி டீ
மனம் அமைதியிழந்து ஒருவித அழுத்தத்துடன் இருந்தால் சீமைச்சாமந்தி டீயைக் குடிக்கலாம்.
இந்த மூலிகை டீ மன பதட்டத்தைக் குறைப்பதோடு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.
முக்கியமாக இந்த டீயை மழை பெய்யும் போது குடித்தால், இன்னும் அற்புதமாக இருக்கும்.
புதினா டீ
புதினா நல்ல புத்துணர்ச்சியைத் தரும் மணத்தைக் கொண்டது. மழை பெய்யும் போது மந்தமான மனநிலையை உணரக்கூடும்.
ஆனால் மழைக்காலத்தில் இந்த மந்தத்தன்மையைப் போக்கி, புத்துணர்ச்சி அளிக்க நினைத்தால், புதினா டீயைக் குடிக்கலாம்.
இந்த டீ செரிமானத்திற்கு உதவுவதோடு, உடலை குளிர்ச்சியாகவும், இதமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
துளசி டீ
மிகவும் புனிதமான செடியாக கருதப்படும் துளசியின் இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடித்தால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
முக்கியமாக இந்த டீ நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும், மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இது மழை பெய்யும் போது கட்டாயம் குடிக்க வேண்டிய டீயும் கூட.
க்ரீன் டீ
க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்க மட்டுமே உதவும் என்று நினைத்தால், அது தவறு. ஏனெனில் இந்த டீ நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
அதுவும் இந்த க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, மழை பெய்யும் போது குடித்தால், இன்னும் அட்டகாசமாக இருப்பதோடு, இரட்டிப்பு பலன்களைப் பெறலாம்.
செம்பருத்தி டீ
செம்பருத்தியைக் கொண்டு டீ தயாரித்து மழை பெய்யும் போது குடித்து வருவது மிகவும் நல்லது.
இந்த டீயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி.ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன.
இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றன.
இந்த செம்பருத்தி டீயை சூடாகவோ அல்லது குளிர்ந்த நிலையிலோ குடிக்கலாம். எந்த நிலையில் குடித்தாலும், இதன் சுவை அற்புதமாக இருக்கும்.