லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் திடீர் திருப்பம்
லசந்த விக்ரமதுங்க கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விடுதலை உத்தரவு தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று சந்தேகநபர்களை விடுவிக்க வழங்கப்பட்ட உத்தரவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் சாட்சியங்களை மறைத்ததாகவும், சாட்சிகளை செல்வாக்கு செலுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று சந்தேக நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்க முடியும் என்று சட்டமா அதிபர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவர்களை விடுதலை செய்யவேண்டிய உத்தரவு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழங்கப்பட்டதைத்தொடர்ந்து, இவ் வழக்கு தொடர்பில் அதிகளவான எதிர்ப்பும், பாராளுமன்றத்தில் பிரதமர், லசந்த விக்ரமதுங்கவிற்கு நீதி வழங்கப்படும் என்ற உறுதிப்பாடையும் வழங்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டிருந்தன.