துமிந்தவுக்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு!
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வலிப்பு (பிட் ஒன்) நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாரத லக்ஷ்மன் கொலையானதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வாவிற்கு சிகிச்சை அளித்த , அதே விசேட வைத்தியர் டொக்டர் மஹேஷி விஜேரத்னவே இம்முறையும் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபயவால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை இடைநிறுத்திய நீதிமன்றம், துமிந்தவை சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் திடீரென ஏற்பட்ட வலிப்பு காரணமாக துமிந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
