மட்டக்களப்பில் திடீரென உணவு பொருள் ஒன்றின் விலைகள் பாரிய அளவில் உயர்வு!
நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி சூழலில் மட்டக்களப்பில் கடல் மீன்களின் விலைகள் பெருமளவு உயர்வடைந்துள்ளது.
இதனால் நன்னீர் மீன்களுக்கு சந்தையில் கேள்வி அதிகரித்துள்ளதுடன் மக்கள் மீன்களையே அதிகம் கொள்வனவும் செய்து வருகின்றனர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அதாவது, மட்டக்களப்பில் வாவியில் நன்னீர் மீன்கள் அதிகமாக பிடிக்கப்படுகின்றன. சுமார் 15000 குடும்பங்கள் வாவி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வாவி மீன்களில் செல்வன், கோள்டன், சள்ளல் கெழுத்தி மணலை கொய் கிளக்கன் அதக்கை உட்பட பல வகையான நன்னீர் மீன்களை மக்கள் விரும்பி உணவாக உட்கொள்வதை அவதானிக்க முடிகின்றது.
நாளாந்தம் காலை நேரத்தில் குறித்த நன்னீர் மீன்களை கொள்வனவு செய்ய அதிகப்படியான மக்கள் வருவதையும் அவதானிக்க முடிகின்றது.