நால்வரை பலியெடுத்த கோர விபத்து; மற்றுமொரு தமிழ் இளைஞனும் பலி
கடந்த 25 ஆம் திகதி புதுக்குடியிப்பில் இருந்து கொழும்பு சென்ற டொல்பின் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கையில் அனுராதபுரம் தலாவ மீரிகம பகுதியில் முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோக்கி சென்ற லொறி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, செம்மலை பகுதிகளை சேர்ந்த (புதுக்குடியிருப்பு தனியார் ஆடைத்தொழில்சாலை) ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்திருந்தனர்.
சிகிச்சை பலனின்றி பலி
இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த புதுக்குடியிருப்பினை சேர்ந்த மற்றுமொரு இளைஞனும் நேற்று (29) உயிரிழந்துள்ளார்.
9 ஆம் வட்டாரம் மல்லிகைத்தீவு - புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞன் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரோடு இந்த விபத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த 5 இளைஞர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.