"சீன பட்டாசுகள்" பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
நாட்டில் தடைசெய்யப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட "ஹக்கா பட்டாசுகள்" மற்றும் "சீன பட்டாசுகள்" ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பட்டாசுத் தொழிலிலிருந்து வெளியிடப்படும் மூலப்பொருட்கள் மற்றும் பிற இரசாயனங்களைப் பயன்படுத்தி "சீன பட்டாசுகள்" எனப்படும் சட்டவிரோத வெடிபொருட்கள் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான காயங்கள் மற்றும் இறப்புகள்
இந்த "சீன பட்டாசுகள்" பட்டாசு மற்றும் பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி "ஹக்கா பட்டாசுகள்" எனப்படும் சட்டவிரோத வெடிபொருட்கள் தயாரிக்கப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
விவசாய நிலங்களிலிருந்து காட்டு விலங்குகளை விரட்ட இவை பரவலாகப் பயன்படுத்தப்படுவதாகவும், இந்த சட்டவிரோத வெடிபொருட்களால் மக்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு பல கடுமையான காயங்கள் மற்றும் இறப்புகள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஃஅதோடு இந்த வெடிபொருட்கள் குறிப்பிடத்தக்கச் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு சவால்களையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை பொலிஸாருடன் இணைந்து நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தப் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.