சிரேஷ்ட சத்திரசிகிச்சை நிபுணர் திடீர் உயிரிழப்பு
பதுளை பொது மருத்துவமனையில் பணியாற்றிய சிரேஷ்ட சத்திரசிகிச்சை நிபுணர் கடந்த 5 ஆம் திகதி திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி, வக்வல்லவைச் சேர்ந்த சானக ஹலிந்த லொக்குகே எனும் 46 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மருத்துவர் பதுளை கைலாகொட பகுதியிலுள்ள வீடொன்றில் தற்காலிகமாக வசித்து வந்த நிலையில், தனது வீட்டில் சுயநினைவின்றி மருத்துவர் இருப்பதை அறிந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பதுளைக் கிளைத் தலைவர் பாலித ராஜபக்ஷ மற்றொரு சுகாதார ஊழியருடன் இணைந்து உடனடியாக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அதன்பின்னர் அங்கிருந்து பதுளை பொது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது பிரேதப் பரிசோதனையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.