முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நாட்களில் 45 ரூபாவுக்கு உட்பட்ட விலையில் விற்பனையான வெள்ளை முட்டை தற்போது 50 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சிவப்பு முட்டை 53 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
முட்டையின் விலை
இந்நிலையில், வெள்ளை முட்டையொன்றை 50 ரூபாவுக்கும், சிவப்பு முட்டையொன்றை 52 ரூபாவுக்கும் விற்பனை செய்யுமாறு முட்டை விற்பனையாளர்களுக்கு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் கோரியிருந்தது.
நத்தார் மற்றும் புதுவருடப்பிறப்பு காரணமாக தற்போது, சந்தையில் முட்டைக்கு அதிக கேள்வி நிலவுகிறது.
இந்தநிலையில், சந்தையில் கேக் உள்ளிட்ட முட்டை சார்ந்த உற்பத்திகளின் விலையும் அதிகரித்துள்ளது.