இலங்கையில் இப்படி ஒரு மனிதரா? தள்ளாத வயதிலும் வியக்கவைத்த முதியவர்!
கண்டியை சேர்ந்த 83 வயதான பியசேன எனும் முதியவர் தள்ளாத வயதிலும் தனது உழைப்பால் பலரையும் வியக்க வைத்துள்ளார். இந்த வயதிலும் கணியில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து வியாபாரம் செய்கின்றாராம் இவர்.
சோம்பேறிகளுக்கு இப்படிப்பட்ட வியாபாரிகள் முன்னுதாரண புருஷர்களாகத் திகழ்கின்றனர்...
அதுமட்டுமல்லாது சிறு வயதில் உடலில் பலமிருந்தும் யாசகம் கேட்பவர்களுக்கு இப்படிப்பட்ட மனிதர்கள் சிறந்த உதாரணம் என சமூக வலைத்தளத்தில் 83 வயதான இந்த முதியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
இவர் விற்கும் துடைப்பம் 200 ரூபா மட்டுமேதானாம். இவரை காண்பவர்கள் முதியவரின் உழைத்து வாழவேண்டும் எனும் அவரது முயற்சியை பாராட்டி அவர் விற்கும் துடைப்பத்தை வாங்கி உதவலாமே...