தரமற்ற நிலக்கரி விவகாரம் ; லங்கா நிலக்கரி நிறுவனம் வெளியிட்ட அவசர அறிவிப்பு
நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்திற்காக 3 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரியை அவசரமாகக் கொள்வனவு செய்ய லங்கா நிலக்கரி நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், 2026 மார்ச் - ஏப்ரல் காலப்பகுதிக்காக அவசர நிலக்கரி கொள்வனவுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரமற்ற நிலக்கரி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், லங்கா நிலக்கரி நிறுவனம் இவ்வாறு அவசர நிலக்கரி கொள்வனவுக்கான அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.
லங்கா நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இந்த அறிவிப்பு கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2026 மார்ச் - ஏப்ரல் காலப்பகுதிக்காக நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்திற்கு 3 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.