போராட்ட களத்தில் மூத்த காவல்துறை அதிகாரியை சூழ்ந்த மாணவர்கள்!
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பல்வேறு போராட்டங்களை நாட்டு மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை நேற்றைய தினம் (05-05-2022) நாடாளுமன்றத்திற்கு முன் மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
நாடாளுமன்றத்திற்கு பேரணியாக சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடையை தகர்க்க முற்பட்ட போது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பின்னர், மாணவர்கள் மீது காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு மூத்த காவல்துறை அதிகாரியை சூழ்ந்துகொண்டு, நாடாளுமன்ற சாலையில் போராட்ட தளத்தில் அவரை நோக்கி கூச்சலிட்டனர்.
University students surrounded a senior Police officer and hooted at him at the protest site along Parliament Road, hours after the Police fired tear gas on the students #SriLanka #lka #protestlk #ParliamentLK pic.twitter.com/IDhY0i2bqq
— DailyMirror (@Dailymirror_SL) May 5, 2022