இலங்கையை உலுக்கிய பேரிடர்; கையில் பென்சிலுடன் புதைந்துபோன சிறுவன்; பொலிஸ் அதிகாரியின் வேதனை பதிவு
நாட்டில் இயற்கை பேரழிவால் மலையக பகுதிகளில் பலர் மண்ணில் புதையுண்டு போயுள்ளனர்.
இந்நிலையில் வெலிமடை பிரதேசத்தில் மண்ணில் புதையுண்ட சிறுவனின் உடலை மீட்கையில் அவனது கையில் பென்சில் இருந்ததாக கூறப்படுகின்ற சம்பவம் கண்ணீரை வரவழைத்துள்ளது.
இது தொடர்பில் ஆங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் (Sampath Abeywickrama) முகநூல் பதிவு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பதிவில்,

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மூன்று மகன்கள்
வெலிமட, கெப்பிட்டிபோல, ரேந்தபோல பகுதி முஸ்லிம்கள் அதிக அளவில் வாழும் ஒரு பிரதேசமாகும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மூன்று மகன்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அதே இடத்தில் புதைக்கப்படும் அளவுக்குக் குரூரமான சம்பவம் நடந்தது.
அந்த ஒவ்வொரு உடலையும் என் இரு கைகளாலும் தூக்க வேண்டிய அளவுக்கு நான் துர்ப்பாக்கியமானவனாக இருந்தேன். சிறிய மகன் எழுதிய ஒரு பென்சில் உடலின் அருகே கிடந்ததை கண்டேன்.

மிகவும் மனவேதனையடைந்து அதை உடலுடன் சேர்த்து வைத்துக்கொண்டேன். அந்தபென்சிலை என்னிடமே வைத்துக்கொண்டு, உடலை ஒப்படைத்தேன் என வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேதனையுடன் பதிவிட்டுள்ளார் .
