யாழில் தந்தையின் பல லட்சம் பணத்தை களவாடிய மகள்; காரணத்தால் க்ஷாக்கான குடும்பம்!
யாழில் வர்த்தகரான தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை அவரது கைத் தொலைபேசியைப் பயன்படுத்தி 17 வயதான மாணவி, நண்பிக்கு பணப்பரிமாற்றம் செய்த சம்பவத்தால் தந்தை ஆடிப்போயுள்ளார் . சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அண்மையில் யாழ்ப்பாண வங்கி ஒன்றிற்கு வர்த்தகர் ஒருவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து 11 லட்சம் ரூபா பணம் தனக்கு தெரியாது மாற்றப்பட்டுள்ளதாக வங்கிக்கு வந்து முறைப்பாடு செய்துள்ளார்.

தீர விசாரணை செய்த வங்கி நிர்வாகம்
சம்பவம் தொடர்பாக தீர விசாரணை செய்த வங்கி நிர்வாகம், பணம் மாற்றப்பட்டது கைத் தொலைபேசி அப் மூலமே என்றும், அதுவும் நள்ளிரவு 11 மணியளவில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது எனவும் வர்த்தகருக்கு கூறியுள்ளது.
இந்நிலையில் தனது தொலைபேசி தனது பொறுப்பில் வீட்டில் வைத்திருந்த போது எவ்வாறு பணப்பரிமாற்றம் நடைபெற்றிருக்கும் என வர்த்தகர் , வங்கி நிர்வாகத்திடம் வாதாடியதுடன் அது தொடர்பில் பொலிசாரிடம் முறையிட போவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு முறை வீட்டில் தீர விசாரணை செய்து வருமாறும் வங்கி நிர்வாகம், வர்த்தகரிடம் கூறியுள்ளது. அதோடு தமது வங்கி அல்லாது இன்னொரு வங்கி கணக்கிற்கு குறித்த பணம் அனுப்பப்பட்டுள்ளதால் அந்தக் கணக்கு விபரங்கள் தமக்கு தெரியாது எனவும் வங்கி கூறியுள்ளது.
இதனையடுத்து வீட்டுக்குச் சென்ற வர்த்தகர் விசாரணைகளை மேற்கொண்ட போது மூத்த மகளே , தந்தையின் பணத்தை மற்றொரு கணக்கிற்கு மாற்றியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்கள்
மறுநாள் வங்கி முகாமையாளர் வர்த்தகரை தொடர்பு கொண்டு விசாரணைகளை செய்த போதே தனது மகள் கணக்கு பரிமாற்றம் செய்துள்ளதாக வர்த்தகர் கூறியுள்ளார்.
வர்த்தகரின் மகளின் பாடசாலை நண்பி ஒருவனின் தாயின் கணக்கிற்கே குறித்த பணம் மாற்றப்பட்டுள்ளது.

வர்த்தகரின் மகளும் நண்பியும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றும், பல தடவைகள் அவர்களை வர்த்தகர் எச்சரித்து பிரிக்க முயன்றதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நண்பி மீதான தீராத காதலால் மாணவி குறித்த பணத்தை பரிமாற்றம் செய்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தனது மகளை ஏமாற்றி பணம் பெற்றமை தொடர்பாக வர்த்தகரால் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.