பாடசாலை செல்வதாக கூறி காதலனுடன் சென்ற பதின்ம வயது மாணவி
பாடசாலை செல்வதாக கூறி பதின்ம வயது மாணவி காதலனுடன் சென்ற சம்பவம் ஒன்று பதுளையில் பதிவாகியுள்ளது.
பதுளை கன்னலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக குறித்த மாணவியின் பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
தாய் வெளிநாட்டில்
பதுளை தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவி கடந்த 03 ஆம் திகதி பாடசாலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
பாட்டி தனது தொலைபேசியை சார்ஜ் போடுவதற்காக மாணவியின் அறைக்கு சென்று பார்த்தபோது அவரது ஆடைகள் இருக்கவில்லை எனவும் அடுத்த நாள் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தனது காதலனுடன் வந்து விட்டதாக கூறியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவியின் தாய் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ள நிலையில் தந்தை கொழும்பில் பணிப்புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கஹட்டருப்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.