வீட்டைவிட்டு வெளியேற கூறினால் நீதிமன்றம் செல்வோம்; மஹிந்த தரப்பு மிரட்டல்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடியிருக்கும் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு அவரை வெளியேற கூறினால் நீதிமன்றம் செல்லவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன
கொழும்பு 07, விஜேராமவில் உள்ள வீட்டில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எழுத்துப்பூர்வமாக அறிவித்தால், அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் குழு தயாராக இருப்பதாக தெரியவருகிறது.
சவால் விடுப்பதற்கு இதுவே காரணம்
முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைக்க வேண்டிய அரசியலமைப்பு சலுகைகள் மற்றும் உரிமைகளை பறிக்கும் வகையில் இந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என ஒரு பின்னணி உருவாகும் எனவும் மொட்டுகட்சியினர் அனுர அசராங்கத்தை எச்சரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அரசாங்கமும் அரசியல் அறிக்கைகளை வெளியிட்டு , எழுத்துப்பூர்வமாக அறிவிக்காததற்கும் இதுவே காரணம் என்றும்ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச , விஜேராம வீட்டை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அதிகாரப்பூர்வமாக கடித மூலம் அறிவிக்குமாறு தொடர்ந்து சவால் விடுப்பதற்கு இதுவே காரணம் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் விஜேராம வீட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கடந்த 3 ஆம் திகதி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.