திருமணத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு
அகலவத்தையில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இவரது தாயார் இவரை திருமண வீட்டிற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய காரணத்தினால் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுமி அகலவத்தை பொலிஸ் எல்லைக்குட்பட்ட வயங்கல்ல பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளை எச்சரித்த தாய்
விடுதியில் இருந்து நேற்று (07) தனது வீட்டிற்கு திரும்பிய மாணவி எதிர்வரும் நாளில் நடைபெறவுள்ள திருமணத்தில் தானும் கலந்து கொள்ள விரும்புவதாக தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
அதில் மகள் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அன்றைய தினம் தனது விடுதிக்கு சென்று பாடசாலைக்கு தயாராகும் படியும் தாய் மகளை எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் அன்றிரவு அம் மாணவி கழிவறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.