சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம் ; கைது செய்யப்பட்ட 10 பேரும் மீள விளக்கமறியலில்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில் இரண்டாம் ஆண்டில் பயின்ற மாணவரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 பேரும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புஸ்ஸல்லாவை - இஹலகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவன் கடந்த 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்டார்.
பகிடிவதைக்கு உள்ளானதை அடுத்து அந்த மாணவன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது தரப்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குறித்த மரணத்துடன் தொடர்புடைய 10 மாணவர்களும் கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.