வங்காள விரிகுடாவில் பலத்த காற்று; சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை நிலவும் நிலையில் பல நாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

14° முதல் 22° வடக்கு அட்சரேகை மற்றும் 82° முதல் 90° கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளுக்குள் மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மற்றும் கடற்படையினர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.