கடற்பரப்பில் பலத்த காற்று எச்சரிக்கை
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் வானிலை ஆய்வுத் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வுத் திணைக்களத்தினால் இன்று (09) காலை 11 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (10) வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த கடற்பரப்பில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த கடற்பகுதிகளில் உள்ள மீனவர்கள் மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை ஆய்வுத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.