முதலமைச்சர் விஜயின் ஆட்சி நீடிக்குமா....ஜாதகம் கூறுவது என்ன!
தமிழக வெற்றிச் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய்யின் பிறந்த ஜாதகம் மற்றும் அவரது பதவியேற்பு நேர ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு பிரபல ஜோதிடர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வெளியான தகவல்கள் பேசுபொருளாகியுள்ளது.
தென்னிந்திய அரசியலில் விஜய் தற்போது மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார். தமிழக அரசியலில் அவரது செல்வாக்கும், மக்கள் மத்தியில் அவருக்குள்ள பிரபலமும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

சவால்களை சமாளித்தால் 2031 வரை ஆட்சியில் நீடிப்பார்
அவரது பிறந்த ஜாதகத்தைப் பார்க்கும்போது, சுக்கிரன் வலிமையான நிலையில் இருப்பது முக்கியமான அம்சமாகத் தெரிகிறது. சுக்கிரன் பொதுவாக வசதி, செல்வம், கவர்ச்சி, புகழ் மற்றும் மக்களைக் கவரும் தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகமாகக் கருதப்படுகிறது.
ஆனால், அவரது பதவியேற்பு ஜாதகத்தை ஆழமாக ஆய்வு செய்யும்போது, 2029 வரை இந்த ஆட்சி நீடிப்பதில் சில முக்கியமான சந்தேகங்கள் இருப்பதாக ஜோதிடடர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 2027-ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசுக்கு எதிராகக் கூர்மையடையும் விமர்சனங்கள், கூட்டணிக் கட்சிகளுக்குள் எழும் முரண்பாடுகள் மற்றும் சொந்தக் கட்சிக்குள்ளேயே உருவாகக்கூடிய உட்கட்சி எதிர்ப்புகள் ஆகியவை 2028-ஆம் ஆண்டை மிகவும் சவாலான காலகட்டமாக மாற்றும் எனக் கூறப்படுகிறது.
இத்தகைய அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிகள் காரணமாகவே, 2029-ஆம் ஆண்டு வரை இந்த ஆட்சி தொய்வின்றி நீடிக்குமா என்ற கேள்வி ஜோதிட ரீதியாக முன்வைக்கப்படுகிறது.
அதேவேளையில், ஒருவேளை இக்கட்டான 2028-ஆம் ஆண்டின் சவால்களைக் கடந்து விஜய் தலைமையிலான அரசு 2029 வரை வெற்றிகரமாக நிலைத்துவிட்டால், அதன்பின்னர் 2031 வரை ஆட்சியில் நீடிப்பார் என்றும் ஜோதிட ஆய்வு சுட்டிக்காட்டுகிறதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.