தேசிய கண் வைத்தியசாலையில் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு!
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (14) காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டார்.
வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியின் அசமந்தப்போக்கு தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரும் சுகாதார அமைச்சும் உரிய முறையில் பதிலளிக்கத் தவறியமையினால் இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பணிப்பகிஷ்கரிப்பு காலத்தில் அவசர சிகிச்சைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும் என வைத்தியர் சமில் விஜேசிங்க இதன்போது குறிப்பிட்டார்.