மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை ; எல்லையைக் கடந்தால் இதுதான் நடக்கும்... அதிரவிடும் ஈரான்
எண்ணெய் தாங்கிகள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் உட்பட அனைத்து வகையான கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரானின் உச்ச கூட்டு இராணுவக் கட்டளையகம் உத்தரவிட்டுள்ளதாக ஈரானின் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
எல்லையைக் கடக்க முயலும் எந்தவொரு கலனும் உத்தியோகபூர்வமாக இலக்கு வைக்கப்படும் என்றும் ஈரானிய இராணுவம் எச்சரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை
அதேநேரம், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கப் படைகளுக்கும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படையின் கடற்படைப் பிரிவுகளுக்கும் இடையே தீவிர மோதல்களும் இருதரப்புத் துப்பாக்கிப் பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் ஈரானின் 7 கடலோரப் புள்ளிகளை இலக்கு வைத்து இதுவரை தாக்குதல்களை நடத்தியுள்ளன.
குறிப்பாக பண்டார் அப்பாஸ் (Bandar Abbas), சிரிக் (Sirik), கெஷ்ம் (Qeshm) மற்றும் ஹெங்காம் தீவு (Hengam Island) ஆகிய கடலோரப் பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
வளைகுடா வான்பரப்பை மீறி நுழைந்த அமெரிக்காவின் எஃப்-16 (F16) போர் விமானத்தை நோக்கி ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகவும், இதனால் அந்தப் போர் விமானம் பின்வாங்க நிர்பந்திக்கப்பட்டதாகவும் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.