பிரபல பாம்புப்பிடி மன்னர் வாவா சுரேக்ஷுக்கு நேர்ந்த கதி; கலக்கத்தில் மக்கள்
இந்தியாவின் கேரளத்தின் புகழ்பெற்ற பாம்பு மீட்பரான வாவா சுரேஷ் நல்லபாம்பு தீண்டியதில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் , இந்த சம்பவம் அப்பகு மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், வாவா சுரேஷ் கேரளத்தில் தனி ஒரு மனிதராக குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த 50,000இற்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டு வனத்தில் விடுவாராம்.
இவர், கடந்த 31 ஆம் திகதி, கோட்டயம் மாவட்டம் சங்கனச்சேரி பகுதியில் உள்ள குரிச்சி கிராமத்தில் குடியிருப்பில் புகுந்த நல்லபாம்பை மீட்கச் சென்றார்.

சில நிமிடங்களில் பாம்பைப் பிடித்து பொதுமக்கள் முன்னிலையில் அதை பையில் போட முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக சுரேஷின் தொடைப் பகுதியில் பாம்பு தீண்டியது.
இதனால், உடனடியாக அவர் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பின், அவரை முதற்கட்ட சிகிச்சைக்குப் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்தனர்.
இந்நிலையில், இன்று காலை வரை கவலைக்கிடமான நிலையில் இருந்த வாவா சுரேஷின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.