நாறும் நாவலப்பிட்டி ; கண்டுகொள்வார்களா அதிகாரிகள்!
நாவலப்பிட்டி நகரத்தின் மாவட்ட வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதியின் இருபுறங்களிலும் உள்ள வாய்கால்களிலிருந்து வீசும் துர்நாற்றத்தினால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாவலப்பிட்டிய பிரதான வீதியில் காணப்படும் வாய்கால்களிலிருந்து வரும் துர்நாற்றம் தொடச்சியாக காணப்படுவதாக விசனம் வெளிட்டப்பட்டுள்ளது.
துர்நாற்றம்
பாதசாரிகள் மற்றும் நோயாளிகளுக்கு பல்வேறு வகையிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் அவ் வீதியின் வழியே காணப்படும் வியாபார ஸ்தாபனங்களுக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் இதனால் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக வைத்தியாசாலை அருகில் இருப்பதால் கிழமை தோறும் வரும் கிளினிக் நோயாளர்கள் நீண்ட நேரம் பாதை ஓரத்திலே காத்திருக்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது.
அவ்வாறு நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் போது அப்பகுதியில் வரும் துர்நாற்றம் கிளினிக் நோயாளர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாவலபிட்டி வைத்தியசாலைக்கு செல்லும் வீதியின் வாய்கால்களை சுத்தப்படுத்தி தருமாறு நகரசபை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்