நாங்கள் இன்னும் நெருங்கிய நண்பர்கள் ; விமல் குறித்து கம்மன்பில விளக்கம்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவிற்கும் தமக்கும் இடையில் எவ்வித மனஸ்தாபமும் இல்லை என்றும், தாங்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்றும் அரசியல் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர் , "நாங்கள் ஏதோ தற்செயலாகச் சந்திப்பவர்கள் அல்ல, எப்படிப் பார்த்தாலும் வாரத்திற்கு ஒரு முறையாவது எங்கேயாவது சந்தித்துக்கொள்வோம்.
நாங்கள் நல்ல நண்பர்கள். அரசியல் ரீதியாக வெவ்வேறு முகாம்களில் இருந்தாலும், ஒரு நண்பனுக்கு ஒரு கஷ்டம் வரும்போது பார்க்கச் செல்லாவிட்டால் அதில் என்ன நட்பு இருக்கிறது? மஹிந்த ராஜபக்ச மட்டக்களப்பிற்குச் சென்று பிள்ளையானைப் பார்த்ததைப் போல தான், நானும் விமல் வீரவங்சவை பார்ப்பதற்காக தலங்கம காவல் நிலையத்திற்கும் கடுவெல நீதிமன்றத்திற்கும் சென்றிருந்தேன்.
நட்பு என்பது அதுதான். நட்பு இல்லாதவர்களுக்கு இதெல்லாம் புரியாது." என அவர் மேலும் தெரிவித்தார்.