தவறிழைக்கும் அதிகாரிகள் நீக்கம் ; புதிய காவல்துறை பிரிவொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை
கணினி சார்ந்த குற்றங்களைத் தடுப்பதற்காக புதிய காவல்துறை பிரிவொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது.
நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 23 முதல் 25 வரையான சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றங்கள் கடந்த காலங்களை விட கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்தக் குற்றங்களை வினைத்திறனுடன் விசாரணை செய்து தீர்ப்பதற்குத் தேவையான புதிய தொழில்நுட்பம், விசேட அறிவு மற்றும் காவல்துறை திணைக்களத்தை நவீனமயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன் காவல்துறை சேவையை மிகவும் சிறந்த, வினைத்திறனான மற்றும் ஊழலற்ற திணைக்களமாக மாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திறமையான அதிகாரிகள் உயர்மட்டத்துக்குத் தகுதி பெறும் சூழல் உருவாக்கப்படும்.
அதேநேரம் தவறிழைக்கும் அதிகாரிகளை சேவையிலிருந்து நீக்குவதற்குமான பொறிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.