மாற்றாந்தாய் மனப்பான்மை ; இலங்கை தொடர்பில் பாகிஸ்தான் கடும் சீற்றம்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் தனது பிரஜைகளிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பாக்கிஸ்தான் கடும் சீற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
38 நாடுகளின் பிரஜைகள் விசா இல்லாமல் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளலாம் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் அந்த பட்டியலில் தனது நாடு இடம்பெறாதமை குறித்து பாக்கிஸ்தான் சீற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாற்றாந்தாய் மனப்பான்மை
பாக்கிஸ்தானிற்கான இலங்கை தூதுவர் ரவீந்திரவிஜயகுணவர்த்தன ,இதனை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார் என்றும், பாக்கிஸ்தானையும் இந்த பட்டியலில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாக்கிஸ்தான் பிரஜைகளிற்கான விசா வழங்கும் நடைமுறை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள இலங்கைக்கான பாக்கிஸ்தான் தூதுவர் மஜர் ஜெனரல் உல் அஜீஸ் , இந்தியா உட்பட ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இதனை மாற்றாந்தாய் மனப்பான்மை என வர்ணித்துள்ளார்.
பாக்கிஸ்தான் பிரஜைகள் இலங்கைக்கு சுமூகமான விதத்தில் பயணம் செய்வதை உறுதி செய்வதற்காக தற்போதைய நடைமுறைய உடனடியாக மாற்றவேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.