திடீரென புகுந்த அதிகாரிகள்; அறிக்கை வெளியிட்ட KFC நிர்வாகம்
கொழும்பு- இராஜகிரிய KFC விற்பனை நிலையத்தில், பொது சுகாதார பரிசோதகர்களால் அங்கிருந்த கோழி இறைச்சிகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் KFC நிர்வாகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
KFC கோழியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அதிகாரிகள் wஅடவடிக்கை எடுத்திருந்தனர் . இந்நிலையில் சம்பவம் தொடர்பில் KFC நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,
KFC நிர்வாகம் அறிக்கை
எங்கள் உணவகம் ஒன்றில் நடந்த சம்பவம் தொடர்பான சமீபத்திய கவலைகளை நிவர்த்தி செய்ய விரும்புகிறோம், இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துகிறோம்.
அனைத்து வாடிக்கையாளர் கருத்துகளையும் நாங்கள் கவனமாக எடுத்துக்கொள்கிறோம், மேலும் முழுமையான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது என்பதை நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்.
தயாரிப்பு மற்றும் சேவை தரம் ஆகிய இரண்டிலும் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாக உள்ளது.
மிகச்சிறந்த உணவுப் பொருட்களைப் பெறுதல் மற்றும் கடுமையான தயாரிப்பு செயல்முறைகளைச் செயல்படுத்துதல் உட்பட, மிகச்சிறந்த உணவுத் தரத்தை உறுதிசெய்ய எங்களிடம் கடுமையான நடவடிக்கைகள் உள்ளன.
உங்கள் நம்பிக்கை, விசுவாசத்தை நாங்கள் மதிக்கிறோம் மற்றும் சமூகத்திற்கு திருப்பி கொடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
நாங்கள் சேவை செய்யும் பகுதிகளுக்கு நேர்மறையான பங்களிப்பை வழங்குவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் மற்றும் உங்கள் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டுகிறோம் என்றும் KFC நிர்வாகம் அறிக்கையில் கூறியுள்ளது.
இராஜகிரிய பகுதியிலுள்ள KFC உணவகத்தில் ,ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையின் படி வாங்கிய கோழியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர் ஒருவர் அளித்த முறைப்பாட்டையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களால் அங்கிருந்த பழுதடைந்ததாக கூறப்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.