முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மகாவலிக்கு சொந்தமான காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தனது அரசியல் அலுவலகத்தை போராட்டகாரர்கள் தீ வைத்து அழித்ததற்காக சட்டவிரோதமாக 8,850,000 ரூபாய் பணத்தை இழப்பீடாக பெற்றமை ஊடாக "ஊழல்" என்ற குற்றத்தைச் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.