மறைந்த இயக்குநர் பாக்கியராஜ்க்கு அரசு மரியாதை ;முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
இயக்குநர் பாக்யராஜின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்க்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் சினிமாவில் இருபெரும் இயக்குநர்களான பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் ஆகியோர் சில தினங்களிலே அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலங்கள் அஞ்சலி...
இயக்குநர் பாக்யராஜ் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பல்வேறு திறமைகளை கொண்ட இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று (27 காலமானார்.
வைத்தியசாலையில் இருந்து அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்கள், திரையுலகினர், மக்கள் அஞ்சலி செலுத்த உடல் வைக்கப்பட்டுள்ளது.
நாளை (28) பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது.